திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் !

கும்மாயம்/ஆடிக்கூழ்:-

தேவையானவை:-

கும்மாய மாவுபச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்துசலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.
கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்
நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.
தண்ணீர் - 4 கப்

செய்முறை:-
பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும்இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும்கரைந்தவுடன்வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும்பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்கையில்ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும்சுடச் சுட பரிமாறவும்.

இது பச்சிளம் குழந்தைகளுக்கும் பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது. அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்றதுதான் என்றாலும் பச்சிளம் வயதில் இடுப்பெலும்பு பலம் பெற இதைச் செய்துகொடுப்பது வழக்கம்.

விதம் விதமான விநாயகர் கோலங்கள்

விநாயகர்  கோலங்கள்


கொம்புத்தேனும் குணத்தேளும்

1541.செப்டம்பர் வந்திருச்சா. :)

#ஹைபர்நேஷன்லேருந்து சீக்கிரம் முழிச்சிட்டனா :)

1542. கையைத் தொட்டுத் தொட்டுப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறது  மழை.

1543. SARVESHU KALESHU MAMANUSMAR.. ( சதா சர்வ காலமும் நாமஜெபம்..)

1544. ஸ்டேடசை லைக் பண்றத விட ஃபோட்டோவை லைக் பண்றது சிக்கல் இல்லாத வேலையா இருக்கு :)

1545. குடிக்காதே

குடிக்காதேன்னு சொன்னாலும்

கேக்க மாட்டேங்குது

சாப்பிடும்போது தண்ணி குடிக்காதேன்னா

ரெண்டு வாய் சாப்பிட்டதுமே.  விக்குறமாதிரி இருக்கே. :)

#செல்ஃப்_அட்வைஸ். :)

1546. அடிக்கடி சிஸ்டத்துல காணாம போயிடுறமே.. வீட்டுல இருக்கவங்க நம்மள கண்டுபிடிச்சு ரியல் வேர்ல்டுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கே.. இது.. INCEPTION AA SPY KIDS AA.. :) : )

கிருஷ்ணர் கோலங்கள்

கிருஷ்ணர் கோலங்கள்


சனி, 12 ஆகஸ்ட், 2017

பசவண்ணாவும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.குல்பர்காவிலிருந்து பிதார் செல்லும் வழியில் பசவண்ணா அவர்கள் பிறந்த கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தோம். ( மாலையில் புத்தவிஹார், குல்பர்கா கோட்டையும் , மறுநாள் பிதார் குருத்துவாராவும், பிதார் கோட்டையும் சென்றுவந்தோம். )

இந்த கூடலசங்கம் கோயில் லிங்காயத் சமூகத்தினரின் புனித தல யாத்திரை இடமாக இருக்கிறது. 

////பசவண்ணா என்பவர் 12 - ஆம் நூற்றாண்டின் கர்நாடகாவின் மன்னர் பிஜாலா 1 அவர்கள் ஆட்சியில் அளிக்கப்பட்ட புலவர் ஆதரவின் கீழ் இருந்த கன்னடப் புலவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் துறவியாவார். பசவண்ணா கடவுள் சிவனின் தீவிர பக்தர் ஆவார். அவரது புரட்சிகரமான இயக்கம் தென்னிந்தியாவில் வீரசைவம் சங்கத்திற்கு (லிங்காயத் சமூகம்) எழுச்சியைத் தந்தது. கூடல சங்கமா அல்லது குடல சங்கமா என்கிற இடத்தில் பசவண்ணா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் மற்றும் அங்கேயே இறந்தார். எனவே லிங்காயத்களுக்கும் வீரசைவத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்விடம் மிகவும் முக்கியமான புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாகும். மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் கூடலசங்கம் சங்கமேஸ்வரா கோயில் (சங்கமநாதா கோயில்) மற்றும் ஐக்ய மண்டபா (பசவண்ணாவின் சமாதி அல்லது கல்லறை) ஆகியவற்றிற்கு புகழ் வாய்ந்ததாக அறியப்படுகிறது. சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!! பசவண்ணாவின் இலக்கியங்கள் மற்றும் பழமையான கர்நாடகாவின் தொல்பொருட்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் கூட அங்குள்ளது. குடலா சங்கமா பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் மாலாபிரபா ஆகிய நதிக்கரைகளிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். கர்நாடகாவிலுள்ள மிகப் பெரிய பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று திகழ்கிறது. பாகல்கோட் ஹோலி ஹப்பாவிற்கு புகழ் பெற்றதாகும். இந்தப் பண்டிகை பண்டைக் காலத்திலிருந்து அதன் ஆட்சியாளர்களால் அவர்களது மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. முன்பெல்லாம் இது 6 நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படும்.////பசவண்ணா 1105 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர். மதராசா, மதராம்பிகை, வசனாஸ் எனப்படும் கவிதைகள் மூலம் சமூகப் புரட்சியை உருவாக்கியவர். பால் வர்க்க பேதங்களைக் களையச் சொன்னவர், மூடநம்பிக்கையை ஒழிக்கச் சொன்ன இவர் தாலி அணிவதற்கு பதிலாக லிங்கம் இஷ்டலிங்கா என்ற கழுத்தணியை அணியச் சொல்லி இருக்காராம்.


Related Posts Plugin for WordPress, Blogger...