எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

'விழுதல் என்பது எழுகையே' ( அறிமுகம் )

ஐரோப்பா அவுஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளின் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதும் 'விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடர் தமிழகம்,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறது.

சென்னையை வதிவிடமாகக் கொண்டவரும் தற்போது ஹைதராபாத்தில் வசிப்பவருமாகிய இளங்கலை வேதியல் பட்டதாரியும்,அரசியல் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டதாரியுமான திருமதி.தேனம்மை லகஸ்மணன் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம்.

திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்களைப்பற்றிய கல்வியியல்,கலை,இலக்கிய செயல்பாடுகள் பற்றிய விபரத்தை வெகுவரைவில் வெளியிடுவோம் என்பதை அறியத்தருகிறோம்.



அதே போல் இலங்கை அம்பாறையில் ஆசிரியப்பணியிலும் கலை இலக்கியப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பன்முக ஆற்றலாளரான திருமதி.நவயுகா ராஜ்குமார் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம்.

திருமதி.நவயுகா ராஜகுமார் அவர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகள் பற்றிய விபரத்தை வெகுவிரைவில் இங்கே வெளியிடவிருக்கிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருமதி.நவயுகா ராஜ்குமார் அவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கும் படத்தினை நாங்களும் மீளப்பதிவு செய்து அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் கவிஞரும் எழுத்தாளருமான திரு.சகாதேவன்துரை நித்தியானந்தன் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

திரு.சகாதேவன்துரை நித்தியானந்தன் அவர்களின் இலக்கியச் செயல்பாடுகளை வெகுவிரைவில் இங்கே வெளியிடுவோம் என்பதை அறியத்தருகிறோம்.

--- மிக்க நன்றி திரு கந்தையா முருகதாசன் அவர்களே :)

ஜெர்மனியில் வசித்துவரும் மதிப்புமிகு நண்பர் திரு கந்தையா முருகதாசன் என்னிடம் இந்தத் தொடருக்கு எழுதும்படி அழைத்திருந்தார். முன் பகுதிகளையும் அனுப்பி இருந்தார். அன்பு நண்பர் திரு.அருள்ராசா நாகராசா முதலில் தொடங்க அடுத்த பகுதியை திரு.முருகதாசன் தொடர்ந்திருந்தார். இன்னும் பதிநான்கு பேர் எழுத அதன் பின் பதினைந்தாம் பாகத்தை எழுதி அனுப்பினேன்.  படித்துப் பாருங்கள். அது வெளியான இணைய இணைப்போடு இன்னொரு இடுகையில் பகிர்வேன். அன்பும் நன்றியும் :)

*********************************************

எனது டைரிக்கிறுக்கல்கள் வலைப்பதிவு பற்றி திரு. கந்தையா முருகதாசன் அவர்களின் கருத்து.

///திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் நாட்குறிப்பு பதிவில் காணப்பபட்ட பதிவிலிருந்து என்னுள் எழுந்த சிந்தனை
நாட்குறிப்பில் எழுதும் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள்அல்ல.
ஒரு தனி மனிதனே வரலாறுதான். அவன் அல்லது அவள் ஒவ்வொரு விநாடிப்பொழுதுகளிலும் சந்திப்பது நிகழ்வுகள்தான். அவைதான் அடுக்கடுக்காக வாழ்கைப் பயணத்தின் படிக்கட்டுக்கள்,படிமங்கள். ஒவ்வொரு படிக்கட்டும் வாழ்வின நிகழ்வுகளாகும்.
அவற்றில் கால் ஊன்றியே நாங்கள் பயணிக்கிறோம்.விநாடிகள் ஒவ்வொன்றும் எதிர்கால வட்டத்தில் நின்று நிகழ்காலமாகி கடந்தகாலமாகிவிடுகிறது.
உங்கள் நாட்குறிப்பு பதிவுகள் வெறும் எழுத்துருவங்கள் அல்ல. அதுதான் உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த சமகால நிகழ்வு,உணர்வு கருத்து.
தொடர்ச்சியாக நாட்குறிப்பு எழுதும் ஒருவர் எழுத்தாளராக இருக்கும் பட்சத்தில் அவர் ஒரு அற்புதமான படைப்பை படைப்பார் அதை நீங்கள் நிரூபித்துக் காட்டியும் வருகிறீர்கள், பன்முகப் படைப்பாளியாகவும் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஏலையா க.முருகதாசன்///

////
'விழுதல் என்பது எழுகையே 'என்ற நெடுந்தொடர் 28வது வாரத்தை எட்டியுள்ளது. இன்றைய தொடர்ச்சியை(28.11.2014) எழுதியவர் திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்.
இவரின் சொந்த ஊர் (இந்தியா) தமிழ்நாட்டின் காரைக்குடி.சென்னையில் வசித்த இவர் இப்பொழுது ஹைதராபத்தில் வசிக்கிறார்.
வேதியலில் இளங்கலைப்பட்டதாரியான (B.Sc Chemistry) இவர் முதுநிலையில் (M.A Political Science) அறிவியல் அரசியல் பட்டதாரியாவார்.
படைப்பாளி திருமதி. தேனம்மை லக்ஷ்மணணன் அவர்கள் சிறுகதை,கவிதை, புத்தக ஆசிரியர், பெண்ணிய விடுதலையாளர்,சிறுவர் இலக்கியம், சிறந்த பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி நடத்துனர், சிறந்த வலைப்பதிவாளர், மனையியல் எழுத்தாளர், மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பன்முக ஆளுமையாளர்.
அவரின் தொடர்ச்சியை மகிழ்வோடு பிரசுரிப்பதுடன் அவரை வாழ்த்தியும் பாராட்டியும் பெருமை கொள்ளகிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal////
நன்றி திரு முருகதாசன். :)


7 கருத்துகள்:

  1. பன்முகத் திறமையாளரான தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள். மேலும் மேலும் பல்வேறு வெற்றிகள் பெற்று ஜொலிக்கவும் என் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் மாபெரும் சாதனைச்சிகரம் என்பதில் பதிவர்களாகிய எங்களுக்கும் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. எழுத்துலகில் மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் அக்கா!.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் மகிழ்ச்சி... தொடருங்கள் சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்கு நன்றி கோபு சார். உங்க முன்னாடி நாங்க எல்லாம் ஒண்ணுமே இல்லை சார்

    நன்றி டா ப்ரியசகி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி கில்லர்ஜி சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...