எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 மார்ச், 2016

தங்கத் தாமரையில் உங்களுக்கும் இடமுண்டு !

சுபா அவர்களின் ( எழுத்தாளர்கள் சுரேஷ் , பாலகிருஷ்ணன் ) தங்கத்தாமரை பதிப்பகத்தில் வரவிருக்கும் நூல் ஒன்றிற்கு நீங்களும் பங்களிப்புச் செய்யலாம். இதை வேதகோபாலன் மேம் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். இதில் என் அன்புத் தங்கை ஷாலினி சாமுவெல் என்னை ( டாக் ) பிணைத்திருந்தார்கள்.

நன்றி இருவருக்கும் மற்றும் சுபா அவர்களுக்கும் தங்கத்தாமரைப் பதிப்பகத்துக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இங்கே பகிர்ந்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தங்கள் அனுபவங்களையும் எழுதி அனுப்புங்க. இதை அனுப்ப ஈமெயில் ஐடி வேணும்னா பின்னூட்டத்துல உங்க ஈமெயில் ஐடில வந்து பின்னூட்டமிடுங்க. அனுப்பி வைக்கிறேன். இல்லாட்டி முகநூலில் வேதா கோபாலன் மேடத்திடமும் ஷாலினி சாம்வெலிடமும் இன்பாக்ஸில் பெற்றுக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் மக்காஸ். :)

///வேதாகோபாலன் பதிவு
//copy paste post
பாலகிருஷ்ணன் (சுபா/ பாலா) இன்று போன் செய்தார்.



சுபாவின் தங்கத் தாமரை பதிப்பகத்தில் வரவிருக்கும் நூல் ஒன்றைப் பற்றிப் பேசினார்.

இதற்கு முகநூல் நண்பர்கள் அனைவரும் பங்களிப்பு செய்யப்போகிறீர்கள்! ரெடியா!

சில வருடங்களுக்கு முன்

திருத்துறைப்பூண்டியிலிருந்து ஒரு பரம ரசிகர் போன் செய்தார். சுபா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் படித்தவராம். சிலிர்த்துப் போய்ப் பேசினார். அவர் புத்தக ஏஜென்சி நடத்துபவர். தங்கத்தாமரை பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களை முப்பது சதவீத கமிஷன் அடிப்படையில் விற்க விருப்பம் என்று கேட்டார். அவர் இருப்பிடத்திற்கே போய்ப் பேசிவிட்டு வந்தார்கள் சுரேஷும் பாலாவும். அந்த அன்பர் கடை என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை, ஆனால் விற்பது பற்றி நம்பிக்கையுடன் பேசினார். திருப்தியடைந்த சுரேஷும் பாலாவும் அவர் கேட்டுக் கொண்டபடி ஒவ்வொரு புத்தகத்திலும் பத்துப் பத்துப் பிரதிகள் அனுப்பினார்கள். அன்றைக்குக் காணாமல் போன அந்த ’ஏஜென்ட்’ இன்று வரை கண்ணில் படவில்லை.

இப்ப வேறு ஒரு கதை..

ஒரு நாள் நண்பர் (சுபா) சுரேஷ் ரோடில் போய்க் கொண்டிருந்தார். ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான், ”சார் காசு பணம் வேண்டாம், எனக்குப் புத்தகம் வேண்டும்” என்றான். நெகிழ மாட்டோமா? அவனை அழைத்துப் போய் அவன் கேட்ட புத்தகத்தை (15 ரூ) வாங்கிக் கொடுத்துவிட்டு மன நிறைவோடு வீடு திரும்பினார். சில நாட்கள் கழித்து அதே பையன் அதே ஏரியாவில் அழுதவாறு அதே புத்தகம் கேட்டான்! மறுபடியும் அந்தக் கடையில் பாதி விலைக்கு விற்பது வழக்கமாம்!

இதே போல் சுரேஷ், பாலா, பட்டுக்கோட்டை பிரபாகர் மூவரும் ஒரு போலி சினிமாத் தயாரிப்பாளரிடம் ஏமாற இருந்து தப்பித்தார்கள், அந்தக் கதையை சில நாட்கள் கழித்து ஊட்டியில் இருந்த எழுத்தாள நண்பருக்கு போன் செய்து சொல்ல ”அடேடே.. நேற்று சொல்லியிருக்கக்கூடாதா…நான் பணம் கொடுத்துவிட்டேனே” என்று வருத்தப்பட்டார் ஊட்டி நண்பர்

சரி..

இதைக் கேட்கும்போது நீங்க விதம் விதமாய் ஏமாந்த சோகக் கதையெல்லாம் வரிசையாய் நினைவுக்கு வருதா?

அப்ப ஏன் தயங்கறீங்க… எழுதி அனுப்புங்க.

இன்பாக்ஸில் கேளுங்க… இ மெயில் ஐ டி தருகிறேன். சிறிய சம்பவமோ பெரிய சம்பவமோ உங்கள் நடையில் உங்கள் எழுத்தில் புகைப்படத்துடன் பிரசுரமாகும்.

இது மற்றவர்களுக்க ஒரு எச்சரிக்கையாக உதவும்… இது போல் மற்றவர்கள் ஏமாறாமல் பாதுகாப்போம்… கம் ஆன் ஃப்ரெண்ட்ஸ் (உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் சொல்லுங்க! நிறையப் பகிர்வோம்!)
இந்தப்பதிவையும் பகிரலாமே!

வேதாகோபாலன் பதிவு

 திரும்பவும் இன்னொரு முறை வாழ்த்தைத் தெரிவிச்சுக்குறேன்  மக்காஸ். :)


7 கருத்துகள்:

  1. ஏமாறதவர்களே இல்லைபோலிருக்கிறது சரி சரி நான் ஏமாந்ததையும் சொல்றேன்
    email-sathiramannai@gmail.com--saraswathirajendran

    பதிலளிநீக்கு
  2. ஏமாற்றம் என்பதே நாம் எதிர்பார்த்த ஒன்று நிகழாது இன்னொன்று நடப்பதே.

    இந்த மாதிரி அனுபவங்களை ஏமாற்றம் என நினையாது, அனுபவங்கள் என்றோ, வாழ்க்கைப்ப்பாதையில் சில வழி காட்டிகள் என்று நினைக்க முற்பட்டால்,
    ஏமாற்றம் என்ற எதிர்மறை உணர்வு மறையலாம்.

    1984 - 87 கால கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு. எங்கள் அலுவலக தணிக்கை சம்பந்தமாக திருச்செந்தூர் அலுவலகத்தில் வேலை. மாலை நேரத்தில் கடற்கரையிலோ அன்று சூர சம்ஹார நிகழ்ச்சி.
    நானும் என் கடற்கரை கோயில் படிகளில் உட்கார்ந்து இந்த அலை போன்ற மக்கள் கூட்டத்தினிடையே வரிசையாக அமர்ந்து பிச்சை எடுக்கும் பரிதாபங்களையும் கண்டோம்.
    அன்றெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு 10, 20 பைசா அல்லது 25 காசுகள் தான் போடுவார்கள். சில பணம் பெரிதும் உள்ளவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு, பையில் நூற்றுக்கணக்கான 10,20,25 காசுகளைக் கொண்டு வந்து அங்கு இருக்கும் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு விநியோகிக்கும் காட்சி .

    எனது நண்பன் என்னிடம் சொன்னான்: இவர்கள் அதிக பட்சம் ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும் ? 10,20,25 அல்லது 50 காசுகளே . இல்லையா என்றான்.
    ஆமாம். என்றேன்.
    ஒரு பிச்சைக்காரனிடம் நாம் ரூபாய் 5 கொடுத்தால் அவன் மன நிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போமா என்று கேட்டான்.
    "அதற்கென்ன ! உங்களைப் போன்று தர்ம துரை உண்டா?
    என சொல்லி நமக்கு நன்றி சொல்லி, நமஸ்காரமும் செய்வான்.

    பார்ப்போமா என்றுகேட்டான். அவனிடம் 5 ரூ இல்லை. என்னிடம் இருந்தது. அதை என் பையிலிருந்து சுவாதீனமாக எடுத்து, ஒரு பிச்சைக் காரனை அழைத்தான்.
    அவன் கைகளில் தந்தான்.
    அதை வாங்கியவனை அடுத்த கணம் நாங்கள் காணவில்லை.
    ஓடி மறைந்துவிட்டான் என எண்ணியபோதிலும் அவனால் ஓட இயலாதே என கண்களைச் சுற்றிப் பார்த்தால்,

    அவன்
    கோவிலின் பிரதான வாயிலில் சாஷ்டாங்க மாக நமஸ்கரித்துக்கொண்டு இருக்கிறான்.

    வேக வேகமாக அங்கு சென்று பார்த்தோம்.

    "முருகா...முருகா முருகா என " முருகன் முன்னே கண்களில் நீர் சொரிய கதறுகிறான்.

    எங்களுக்கு நன்றி சொல்லவில்லை.
    எங்களைக் கொடுக்கவைத்த முருகனுக்கு நன்றி சொல்கிறான்.

    நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை.

    எது நடப்பினும் நாம் ஒரு கருவியே என்று முருகனே நமக்குப் புரிய வைத்தானோ ?

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    ஆமாம் ஜெயக்குமார் சகோ :(

    சதிராம்மா ஐடி அனுப்பி இருக்கேன் பாருங்க ஜிமெயில் இன்பாக்ஸ்ல :)

    அருமையான பகிர்வு சுப்பு சார். முருகன் நம்மைக் கருவியாகப் பயன்படுத்தித் தேவையானவர்களுக்கு உதவி செய்துள்ளான். நினைக்கும்போதே மெய் சிலிர்க்கிறது !

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. ஹப்பா எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள்...பார்க்கலாம் அனுப்ப முயற்சி செய்கின்றோம்..

    சகோ நலம் தானே...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...