எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜூலை, 2016

காதல் ஆழியும் ”ங்கா”வும்.

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
--பாரதி

கொஞ்சம் லாங் லாங் அகோ போடவேண்டிய போஸ்ட். :) ரொம்ப அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன் இது 2012 இல் காதலர் தினத்தன்று நடந்தது. எவ்ளோ சுறு சுறுப்பு நாம. :)


டிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன். 


இதில் நினைவில் மிஞ்சி இருந்த விஷயம். கேபிள் சங்கர் அவர்களும் அதிஷா வினோ அவர்களும் கூறியதுதான். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடலைப் போலப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.


ப்ரியா தம்பி காதலிக்கும் மனநிலைக்கும் திருமணத்துக்கும் பின்னான காதலுக்கும் இருக்கும் வித்யாசத்தைச் சொன்னார். 

நான் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வுதான் முக்கியம் . அந்த செக்யூர்ட் ஃபீலிங் இருந்தால்தான் காதலே வரும் எனக் கூறினேன். அதை ப்ரியா ஆமோதித்தார். முகநூலில் சந்தித்து காதலித்து மணந்து வெற்றிகரமாக வாழும் சில தம்பதிகளை நானறிவேன். ( அதில் கண்பதி கண்ஸ் & கோமளா வத்துமலை தம்பதியரும் ஒருவர் ). 

முகநூலில் வெற்றிகரமாகத் தன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டே எந்தக் குளறுபடியிலும் சிக்காமல் செயல்படுவதாக அதிஷா கயல், ப்ரியா &  என்னையும் குறிப்பிட்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

////செந்தில்நாதன் கலந்துரையாடலைத் துவங்குகிறார். 


Kavin Malar எப்பவுமே Senthil Nathan ! நீங்கள்ன்தான் காதல் குறித்த உரையாடலைத் துவக்குவீங்களா? :))

Thenammai Lakshmanan
Thenammai Lakshmanan கவின் இந்த வருடம் காதல் ஆழியாச்சே.. மூழ்காமல் இருக்க முடியுமா..:)
Aazhi Senthil Nathan
Aazhi Senthil Nathan அப்படி இல்லைங்க! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்கிற முறையில் ஒரு நிகழ்ச்சி அறிமுகம்தான் செய்தேன்////


/////Kavin Malar Athisha Vino நீங்க எத்தனாவது காதல் பத்திப் பேசுனீங்க?

Athisha Vino
Athisha Vino தோழர் நான் நல்லபையன்.. பன்னிரெண்டு காதல்களை பத்தி மட்டும்தான் சொன்னேன்
Thenammai Lakshmanan
Thenammai Lakshmanan ஹஹஹ அதுல அந்த சீனா காதலும் சேர்த்தியா வினோ.. அல்லது அது தனியா..:)
Athisha Vino
Athisha Vino அது ஸ்பெஷல்.. அந்த எபிசோட் அமரகாதல்கள்ல மட்டும்தான் சேர்த்தி//////
அங்கே வந்திருந்தவர்களுக்கு எனது இரண்டாவது நூலான “ங்கா” கவிதைத் தொகுதியைக் கொடுத்து மகிழ்ந்தேன்.

பிரபல வலைப்பதிவர்..சுரேகா சுந்தர்.

ஆழி பப்ளிஷர்..செந்தில் சார்

திரு குலசேகர் சார்.

எஸ். ஆர். எம். யூனிவர்சிட்டியின் எஃப் எம், மற்றும் ஆஸ்த்ரேலியன் ரேடியோவின் ராமன் நாகப்பன்..

அசிஸ்டெண்ட் டைரக்டர் செந்தாமரைக் கண்ணன். 

அழிக்கப் பிறந்தவன் மூலம் ஆளும் யுவகிருஷ்ணா
வலைப்பதிவர் அதியமான்

மதன் செந்தில்..

திரு ஞாநி அவர்கள்  காதலர் தினமான அன்றுதான் இதயத்தைக் காப்பாற்றும்  WORLD CONGENITAL HEART DEFECT AWARENESS DAY என்பதைப் பகிர்ந்தார்கள். விசேஷ தகவல்தான். இதயமும் இதயமும் சேரும் நாளில் இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதும் முக்கியம்தானே. !

Vediyappan M Munusamy வாழ்த்துக்கள் அக்கா! 50ரூபாய் என்ற குறைந்த விலையில் மதிப்பு மிக்க புத்தகம் “ங்கா..”
Thenammai Lakshmanan
 
 
 
   


என்னுடைய இரண்டாவது புத்தகமான ”ங்கா..” வை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தேன்.. ஆராதனாவின் புகைப்படங்களோடு மிக அருமையான புத்தகமாக்கியமைக்கு மிக்க நன்றி தாமோதர் சந்துரு அண்ணா.. :) வாழ்க வளமுடன். :)


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...