எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பவளவிழா மலரில்.

பரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்கி பிழா மில்.


75 ஆண்டுகள்;,  முக்கால் நூற்றாண்டு..!! வெற்றிகரமாகப் பத்ரிக்கைப் பணியில் கோலோச்சி வரும் கல்கி குழுமப் பத்ரிகைகள், வேரூன்றிப் பாய்ந்திருக்கும் தமிழ் விருட்சத்தின் அற்புதக் கிளைகள். கல்கி குழும ஊழியர்களின் குழந்தைகளிடமும் தமிழ் விதையைத் தூவவும், ஆலம் விழுதாய்த் தமிழை ஊன்றவும்  பவளவிழா ஆண்டு நிறைவை ஒட்டி கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்காக ஜூன் 11 ஆம் தேதியன்று பாரம்பரியப் பெருமை மிக்க கல்கி வளாகத்தில் தமிழ் செழிக்கப் பல்வேறு போட்டிகளும் குதூகலமாய் நடைபெற்றன.

வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் ஒப்புவிக்கும்  போட்டிகள் முதலிலும் அதன் பின்  வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியும், பாடல்  போட்டியும் நடந்தது. மினிஷா நாயர் தொகுத்து வழங்க மலேஷியா சங்கர் மாஜிக் ஷோவும் மிமிக்ரியும் நடத்தி அனைவரையும் குழந்தைகளாக்கினார்.

கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது. அம்முன்னேடுப்பில் முதன்மையாக இருக்கும் கல்கி குழுமத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பெருமைக்குரியவர்களே



மனனம் செய்வது என்பது பதின்பருவங்களோடு முடிந்து விடுவதால் அந்தப் பருவத்துக்குள் முடிந்தவற்றை படித்துவிடுவது உத்தமம் . உச்சரிப்பு, மேடைக்கூச்சம் இல்லாமல் சொல்கின்றார்களா, பிழை இருக்கின்றதா, மறக்காமல் பத்தையும் நினைவுபடுத்திச் சொல்கின்றார்களா என கவனித்து மதிப்பெண் அளிக்கப்பட்டது. பெரும்பாலும் நன்றி பற்றியும் ஒழுக்கம் பற்றியுமே குறள்களைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். முதலில் சிலர் சிறிது தடுமாறினாலும் அடுத்து வந்தவர்கள் மிக அருமையாகத் திருக்குறளை ஒப்பித்தார்கள்.


வார்த்தை விளையாட்டு என்ற  நிகழ்ச்சியில்  ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாமல் உரையாட வேண்டும். ஒரே வார்த்தையை மூன்று முறைக்குமேல் உபயோகிக்கக் கூடாது. இதுதான் அதன் சட்டதிட்டம். வார்த்தை விளையாட்டில் என்ன படிப்பாய் எனக் கோகுலம் பொறுப்பாசிரியர் ஒரு சிறுவனைக் கேட்க கோகுலம் படிப்பேன் என்று அவன் கூற., கோகுலம் பொறுப்பாசிரியரிடமேவா எனச் சிரிப்பலை பறந்தது. இில் மங்கையர் மர் ஆசிரியை மீனாட்சி மட்டுமே வெற்றி பெற்றார்.

பாடல் போட்டியில் அருமையான தமிழ்ப் பாடல்களைச் சில பெண் குழந்தைகள் பாடினார்கள். நல்லகுரல்வளம். இனிமை. கீதம் சங்கீதம். அடுத்து ஒரு அழகிய முயற்சியாக அங்கே பணிபுரியும் மினிஷா, செல்வி இன்னும் சில இளம்பெண்கள் பாடினார்கள். க்ரூப் சாங்  நன்றாக இருந்தது.

ஆப்ரா கா டாப்ரா. என்றதும் நமக்கு தொப்பியும் முயல்குட்டியும் , புறாக்களும் பறவைகளும் வளையங்களும் ரிப்பன்களும்  பூக்களும்,கூடவே ஒரு மாஜிக் நிபுணரும் ஞாபகத்துக்கு வருவாங்க. மலேஷியா சங்கரோ நீண்ட மெல்லிய வாளை விழுங்கி, குழந்தைகளின் காதில் பெப்ஸி கோகோ கோலாவை ஊற்றி அடுத்த காதில் வரவைத்தார்.! இதைப் பார்த்த அனைவரின் கண்களிலும் மேஜிக் கற்றுக் கொள்ளும் ஆவல் ஒளிவிட்டது.

திருக்குறளுக்காக இவ்வளவு முயற்சி எடுத்த பொறுப்பாசிரியருக்கும் அதை நிறைவேற்றிய சக ஊழியைகளுக்கும். நல்ல முறையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த குட்டீஸுக்கும் அவங்களைத் தயார்ப்படுத்திய பெற்றோருக்கும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

சரித்திரப் புதினங்களின் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.  அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும். நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள். பவள விழாக் கொண்டாட்டத்தின் பரவஸ தினத்தில் இனிக்கும் திருக்குறள் விருந்தில் திளைந்து கல்கி குழும நிர்வாக இயக்குநரின் அறையில் பத்ரிக்கை முன்னோடிகளின் புகைப்படங்களையும் நடுத்தளத்துக்குச் சென்று கல்கி அவர்களையும் தரிசித்து சிறப்புக்கு நன்றி கூறி வந்தோம்!.


பிற்சேர்க்கை - 1  :-

மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து டி (  D ) தியரி பற்றிச் சொல்லலாம் என நினைக்கிறேன். DREAM, DISTRACT, DESTINY, DETRIMINE, DESERVE. இதுதான் அந்த ஃபைவ் டி தியரி (  FIVE  --D -- THEORY ) .

1. அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற., எண்ணியதை எய்த கனவு காணுங்கள். - ட்ரீம். - DREAM,

2. அந்தக் கனவை நனவாக்க விடாமல் உங்களை டிஸ்ட்ராக்ட் செய்யும் விஷயங்களைக் கண்டு ஒதுக்குங்கள். விலக்குங்கள். - DISTRACT,

3. எந்த விஷயத்தை அடையவேண்டும் என்று ஒரு முடிவான இலக்கை நிர்ணயுங்கள். - டெஸ்டினி - DESTINY,

4. அதற்கான திட்டமிட்டு உழையுங்கள் - டிட்டர்மைன் - DETRIMINE,


5. அப்படி உழைத்தால் நீங்கள் எண்ணியது எய்துவீர்கள். -யூ டிஸர்வ்.  - YOU DESERVE.

இந்த ஃபைவ் டி தியரியைப் பின்பற்றி வெற்றிபெற வாழ்த்துகிறேன். உங்க எல்லாரோடயும் உரையாட நேர்ந்தது குறித்து சந்தோஷம்.

பிற்சேர்க்கை – 2. :-

கல்கியில் எனது முதல் கவிதை ஃபிப்ரவரி 1985 இல் வெளிவந்தது - கிராமத் திருவிழா என்ற  கவிதை மாணவர் பக்கத்தில் வெளியானது . அதற்குக் கொடுக்கப்பட்ட - பி. எஸ். மணி என்ற எடிட்டர் கையெழுத்திட்ட காசோலையையும் -  15 வாசகர் கடிதங்களையும் ( வாசகர் கடிதங்கள் பாகம் - 1, வாசகர் கடிதங்கள் பாகம் -2  ) என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். பெருமிதமாக உணர்கிறேன். அதன் பின் கல்கியின் கவிதை கஃபேயில்  சென்ற வருடங்களில் நான்கு கவிதைகளும் வெளியாகி உள்ளன.   - இரவு, மெழுகின் முணுமுணுப்புமீன்கள், கோதுதல்  }}


6 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...