புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 22 ஜூலை, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் பற்றி சுந்தரி செல்வராஜ்.

சாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் பற்றி சுந்தரி செல்வராஜ்.


( உங்க ஃபோட்டோவை சுட்டுட்டேன் மன்னிச்சிடுங்க J)
 

முகநூல் ஒரு பொழுதுபோக்குத்தளம். இதைத் தன்னுடைய ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தியோர் ஏராளம். ( நானும் இதில் உண்டு.) ஆனால் நட்பை வளர்ப்பதற்கு மட்டுமே முகநூலைப் பயன்படுத்துபவர்கள் சிலர். அவர்களுள் என் அன்பிற்கினிய தோழி சுந்தரி செல்வராஜ் குறிப்பிடத்தக்கவர்.

பெங்களூரில் வசித்து வரும் இவர் எப்போதாவது ஒரு முறை நம் பக்கம் வந்தாலும் வலைத்தள போஸ்ட் எல்லாம் படித்து விட்டே கமெண்டுவார். இவருக்கு எதையும் உண்மையாகச் செய்யவேண்டும், போலியாகப் பாராட்டத் தெரியாது. சிறந்த சாய் பக்தை. சொல் ஒன்று என்றால் செயலும் ஒன்றுதான். அதுதான் அவரின் சிறப்பு.

வெள்ளி, 21 ஜூலை, 2017

ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.


சேலத்தின் ஹோட்டல் ஸ்ரீ ஷாந்தில் உணவும் ஓவியமும் அருமை.

ரிஸப்ஷனிலும் லிஃப்டின் அருகிலும் ஒவ்வொரு தளத்திலும், அறையிலும்  உணவுக் கூடத்திலும் கூட ஓவியங்கள் அழகூட்டுகின்றன.

உணவும் நல்லாவே இருந்தது.

வித்யாசமான புடைப்புச் சிற்ப ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்ததால் க்ளிக் க்ளிக் தான். :)


கொம்பூதியபடி செல்லும் காவலர். குதிரையில் செல்லும் ராஜா . டோலியில் வரும் ராணி. அழகுச் சிற்பம். உணவுக்கூடம் ( பஃபே ஹால் ) செல்லும் வழியில்.

காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.

வெண்கல தண்ணீர் ஜக், டம்ளர். இதில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லதாம்.
டபுள்டெக்கர் பீரோ இல்ல . அட ஒரே பீரோதாங்க. அவ்ளோ உயரமா இருக்கு.

காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

இது காரைக்குடியில் உள்ள ஒரு அழகான இல்லத்தின் முகப்பு.
சில வீடுகளில் முன்னோர்களைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட இல்லம் ஒன்றில் அவர்கள் அப்பத்தாவின் புகைப்படத்தை எடுத்தேன். 

ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை.

ஸ்ரீ மஹா கணபதிம்

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கரும மாதலால்
கணபதி என்றிடக் கரும மில்லையே

-திருமூலர் 


ஓம் விநாயகா சரணம். 


காரில் காக்கும் கணபதி.


கோவை ஸ்பினோஸில் எடுத்தது.
வேறெங்க நம்ம பழனி ( அப்பனைப் பாக்கப் போகும்போது ) தான். யானை அடிப் பாதையில்.

புதன், 19 ஜூலை, 2017

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..


இத்திருத்தலைத்தைப் பார்த்ததுமே மிகக் கம்பீரமாகவும் பொலிவாகவும் இருந்தது. பெருமாள் உறையும் ஸ்தலங்கள் என் மனதிற்குப் பிடித்தமானவை. அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ரொம்ப அட்டகாசமாக தலைக்குக் கீழே கை கொடுத்து அரவணையில் அரைத்துயிலில் அவர் அருள் பாலிப்பதே அம்சம். இங்கே வலதுகை கீழ் வைத்து  சயனத்திருக்கோலத்தில் இருக்கிறார் ஸ்ரீ தர்ப்ப சயன இராமர்.  . முதலில் அவரது பிரம்மாண்டத் திருக்கோலத்தில் வியந்து பாத தரிசனம் செய்து திரும்பத் திரும்ப அந்தக் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் கரிய எம் பெருமானை கண் நிறைய வணங்கினேன்.


இவர் ராமருக்கு பாணம் தந்து வெற்றி பெற உதவியதால் வெற்றி பெருமாள் என்றும் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பட்டாபி ராமர், சந்தான ராமர், லெக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் சிறப்பாக அருள் பாலிக்கிறார்கள்.

கர்ப்பஸ்த்ரியின் அட்ராசிட்டீஸ்
கர்ப்பஸ்த்ரியின் அட்ராசிட்டீஸ் 

அன்புள்ள அத்தான் வணக்கம். 

உங்கள் ஆசைப் பைங்கிளியின் வணக்கம். நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தீபம். நீயே எந்நாளும் என் காதல் கீதம்.

உங்கள் நினைவுகளே என் நினைவுப் பெட்டகத்தின் பொக்கிஷங்கள். நமக்குப் பிடித்த கவிதை வரிகளை நினைவில் நிறுத்தி ரசித்து ரசித்துச் சுவைப்பது மாதிரி உங்களுடைய நினைவை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

சுவையான ஐஸ்க்ரீமை நினைத்து ஏங்கும் கோடைக்காலச் சிறுவனைப் போல நான் இங்கே தவித்துக் கிடக்கிறேன்.  நாட்களும் நகராதோ. பொழுதும் போகாதோ.. மாலை என்னை வாட்டுது.

செவ்வாய், 18 ஜூலை, 2017

நாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்.


நாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்.

ஆண்டொன்று போனால்..HAPPY BIRTHDAY :) VAAZGHA VALAMUDAN :)

இதுதான் நான் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்று பார்த்தால் முகநூலில் வாழ்த்துச் சொல்லி எழுதுவது. வித்யாசமாய் செய்யவேண்டும் எனத் தோன்றியதே இல்லை.

ஆனால் என் பிறந்தநாளின்போது சில நட்பூக்கள் வாழ்த்தி இருந்தது அழகாய் இருந்ததால் அவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

நன்றியும் அன்பும் அனைவருக்கும்.  
GRASTLEY JAYA WISHES.

**Shivaji R S‎.

♪♥ (,) ♫♪♥
.....~.| |~ HAPPY
.....{░♥░}......
...{░♥░♥░} BIRTHDAY
.{░♥░♥░♥░}.......
\¤¤¤¤¤¤¤¤¤¤/
(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..Shirdi Sai Baba’s Blessings ♪♫•*¨*•.¸¸¸¸.•*¨*•♫♪? ! .. Be With You Always Dear One(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯)Vaazhga Valamudan (¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..

OM SREE SAMARTHA SAYEE
ANANTHAKOTI BRAHMANDA NAYAKA RAJADHIRAJA YOGIRAJA PARABRAHMA SACHIDANANDA SREE SREE SREE SAMARTHA SADGURU SAINATH MAHARAJ KI JAI..

-- நன்றி சிவாஜி சந்தானம் சார். 

** Dhavappudhalvan Badrinarayanan A M‎

வண்ண தமிழ் சொற்களின்
வான் தாண்டியும் கோலங்கள்.
நலமுடன் பல்லாண்டு
மகிழ்வுடன் வாழ
உமக்கான இந்நாளில்
அன்புடன் வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிச் சகோ.

-- நன்றி தவப்புதல்வன் பத்ரிநாராயணன் சார். 

** வழக்கறிஞர் கண்ணன்

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

-- நன்றி கண்ணன் சார். 

** யாழகிலன் அபிமன்யு சனா

இன்று கவிதை க்கு பிறந்த நாள் விழா.
வெறுமனே கவிதை மட்டும் அல்ல
அழகான கோலமும் சமையல் தடாகம்

உண்டவராக அம்மாவுக்கு
உப்பாய் நன்றி நன்றியும் உடனாக வாழ்த்த இறைவனை வேண்டுகிறேன் அம்மா

-- நன்றி அகிலா  

சுமையா – ஒரு பார்வை.சுமையா – ஒரு பார்வை.

வைக்கம் முகம்மதுபஷீர், தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா வரிசையில் கொண்டாடப்படவேண்டியவர் கனவுப் ப்ரியன். அவரது சிறுகதைத் தொகுப்பு சுமையா படித்தவுடன் ஒரு மாதிரி பரவசமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டு நூலைக் கீழே வைக்காமல் 3 மணி நேரத்தில் படித்து முடித்தேன்.

21 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒரு விதம் . ஒரு ரகம். ஒன்றோடு ஒன்று தொடர்பில் வருவதில்லை. நிலப்பரப்பும் நினைவுப் பரப்பும் கூட !. ஒரு தீப்பொறியைப் போல அவரது கதைகள் என்னுள் இறங்கி இருக்கின்றன. உரசினால் ஆக்கபூர்வமான நெருப்பைப் பற்ற வைக்கும் ஏன் என்று கேள்வி கேட்கும் ஒரு மனிதநேய மனிதனின் கேள்விகள் அடங்கிய கதைகள்.

திங்கள், 17 ஜூலை, 2017

மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.மலேஷியாவுக்கு சென்றிருந்தபோது பத்துபகாட், ஜெண்டிங் ஹைலாண்ட், பெட்ரோனாக்ஸ் டவர்ஸ், ஆகிய இடங்களில் எடுத்த ஓரிரு சிறந்த ( ! ) புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு :) :) :)

இது பத்துமலைக்கோயிலில் உள்ள யானைகள் சிலை.
 பத்துமலைக் கோயிலில் சில காட்சிகள்.

சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

சிங்கப்பூர் சென்றபோது எடுத்த ஒருசில புகைப்படங்களை ஏதோ ப்ரபல ஃபோட்டோகிராஃபர் ரேஞ்சுக்கு நினைத்து என் லாப்டாப்பில் வைத்திருந்தேன்.

லோட் அதிகமாகி அது சிக்கித் திணறுவதால் எல்லாவற்றையும் ப்லாகில் கொட்டி சேமித்து வைக்கலாம்னு எண்ணம். ஆனா ப்லாக் கூட 5000 போஸ்டுக்கு மேல தாங்காது போல

இது குறித்து டிடி சகோவிடம் கேட்க நினைத்திருந்தேன். இல்லாவிட்டால் இன்னொரு ஈமெயில் ஐடி ஆரம்பித்து வேற ப்லாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்.

பிரிக்க முடியாதது என்னவோ நாமும் ப்லாகும். :)

சிங்கப்பூரின் ஜப்பானீஸ் கார்டனில் உள்ள ஜப்பானிய பாணி கட்டிடம். இந்தப் பூங்காவில் கன்பூசியஸின் சிலை இருக்கு.

ஆமைப் பூங்காவில் ஒன்னுமேலே ஒன்னு ஏறிக்கிட்டுப் பண்ற அட்டகாசத்தைப் பாருங்க.
அங்கே உள்ள குபேரர்கள். நவ/அஷ்ட குபேரர்களின் குபீர் சிரிப்பு !

சனி, 15 ஜூலை, 2017

டேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.வியாபார நிமித்தமாக வந்து இந்தியாவை ஆக்கிரமித்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களில் டச்சுக்காரர்கள் ப்ரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்த வரிசையில் டேனிஷ்காரர்களுக்கும் ஓரளவு பங்குண்டு.

பதினாறாம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த அவர்கள் ( முதன்முதலில் ஈழத்து சாய்ந்தமருதுவில்தான் இறங்கி இருக்கிறார்கள் ) தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடம் ஒப்பந்தம் பெற்றனர். ஓவ் கிட் என்ற அதிகாரி மூலம் 1620 இல் கட்டப்பட்டதாம் இந்த டேனிஷ் கோட்டை.

இங்கே ஒரு விடுமுறை நாளில் சென்றபோது அங்கேயும் கோட்டைக்கு விடுமுறை தினம் எனத் தெரிந்தது. விடுவோமா நாம சுத்தி சுத்தி  கோட்டையை எடுத்திடமாட்டோமா.இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இக்கோட்டை வியாபாரச் சரிவு, அலைகளில் மீளமுடியாத கலங்கள், காலனி ஆதிக்கத்தின் அரசியல் நெளிவுசுளிவுகளில் சிக்கித்தவித்தது, மன்னரின் ஆணையாலும் ஆதரவின்மையாலும் வியாபாரத்தை நிறுத்தியது, நட்டத்தில் ஓடிய வியாபாரம் என பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் விற்க நேரிட்டது.


திருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்கள்.

தோணியப்பரைப் பார்த்துத் தோடுடைய செவியன் என்று ஞானப்பால் பெற்ற திருஞான சம்பந்தர் பாடிய பாடல் இங்கேதான் நிகழ்ந்தது.

திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியையும் அபிராமியையும் அதே நாளில் தரிசித்தோம்.

இங்கே தங்கவில்லை. அழகாக இருந்தது என்று எடுத்தேன். 

அபிராமி அம்மையைத் தரிசிக்கக் காத்திருந்த நேரத்தில் முன் ஹாலில் எடுத்தது. 

அலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.ஒரு மனிதனின் வாழ்வில் இரு சிலம்புகளின் ஒலிக்கிடையேயான அவன் கதைதான் சிலப்பதிகாரம். 

ஒருத்தி சிலம்பினால் கவரப்பட்டு இன்னொருத்தி சிலம்பினால் மரணப்பட்ட கோவலனின் காவிரிப்பூம்பட்டினத்துக்குச் சென்றபோது அவனது வாழ்வின் மொத்தத் துயரையும் குத்தகை கொண்டதுபோல  ஆவேசமாக அடித்து அடித்து வருத்தம் தீர்த்துக்கொண்டிருந்தன அலைகள்.

ஒரு பெண்ணின் பார்வையிலேயே இதுவரை சிலம்பைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஆணின் பார்வையில் சிலநிமிடம் யோசித்தேன்.
திருமணமான உடனே ஆண் ஒருவன் ஒரு ஆடலரசியின் கால்தண்டையின் ஒலியின்பால் மயக்கப்பட்டுப் பின் சென்றுவிடுகிறான். 

அத்தலைக்கோலரிவையிடம் தன்னையே இழக்கிறான். தவறைத் தவறென்று அறியாமல் செய்த அவன் அத்தவறிலேயே மூழ்கி மணிமேகலை என்ற முத்தையும் எடுக்கிறான். 

அதன் பின் அவனுக்கும் அவனுடைய இணையான மாதவிக்கும் பிணக்கு ஏற்படத் திரும்பத் தன் மனை(வி)யிடமே திரும்புகிறான். எப்போதும் அவனுக்காய் மலர்ந்திருக்கும் கண்ணகியின் இல்லமும் உள்ளமும் அப்போதும் அவனை ஏற்றுக் கொள்கிறது. 

இருவரும் மதுரை திரும்புவதும் கவுந்தி அடிகளைச் சந்திப்பதும், அதன் பின் கண்ணகி கணவனுக்கு அறுசுவை உண்டி படைப்பதும் தனது தண்டையைக் கழட்டித்தருவதும் நிகழ்கிறது.

ஒரு சிலம்பில் வாழ்வைத் தொலைத்தவன் மறுசிலம்பில் மீட்டெடுக்கப் பார்க்கிறான். இரு சிலம்புகள் மட்டுமல்ல மூன்றாம் சிலம்பு ஊடுருவி ஊழ்வினையாய் அவனை ஆக்கிரமிக்கிறது.  ஆனால் தவறிழைத்தபோதெல்லாம் காத்த சிலம்பு சரியான பாதைக்கு வந்தபோது அவனைத் தவறானவனாகக் காட்டித் தண்டித்துவிடுகிறது.  

மிகுந்த துயரம் தோய்ந்த இக்கதையை இளங்கோ அடிகள் எப்படித்தான் எழுதினாரோ என்று வருந்தும்படி இருந்தது. 

சீர்காழிக்கு அருகில் உள்ள பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  கண்ணகி, கோவலன் மாதவியின் புடைப்புச் சிற்பங்களோடு கதை சொல்லப்பட்டுள்ளது. கண்ணகியின் கால் சிலம்பை எடுக்க முயன்றபோது காமிராவில் அந்த ஃபோட்டோ மட்டும் சரியா விழலை. அத அப்ப கவனிக்கவும் இல்லை. இதுனாலதானே அவனே போய்ச்சேர்ந்தான் என்ற காரணமோ என்னவோ.
கண்ணகியும் கோவலனும் மணக்கோலத்தில்.
பூம்புகார் என்ற பட்டினப்பாக்கம். ( காவிரிப்பூம்பட்டினம்.)மணவிழா வாழ்த்து.

கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

முதல் இரண்டு புகைப்படங்களும் கோவிந்தபுரத்தில் எடுத்தது. பசுமடத்தின் வெளியே மேயும் குதிரைகள். கூடவே திரியும் கொக்குகள்.


வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு இரட்டைவால் குருவி/கருங்குருவி  !!

காவிரிப் பூம்பட்டினம் கடற்கரை நோக்கி நிற்கும் தமிழன்னை !
லைட் ஹவுஸின் சுழல் படிகள்

கீழிருந்து மேல்

வெள்ளி, 14 ஜூலை, 2017

டாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்டர்.மன்னார்குடி மூன்றாம் தெருவின் முக்கில் உள்ள அந்த வீட்டை மறக்கவே இயலாது. கிராப் வெட்டிய இளைஞன் போல் மாடியில் இருந்து வெட்டிவிடப்பட்ட கொடிகள் முகத்தை மறைக்கக் கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்த வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது நாங்கள் சென்றிருப்போம்.

உள்ளே நுழைந்ததும் ஒரு நடை அதைத் தட்டியால் தடுத்தபடி ஒரு ஹால். அந்த ஹால் ஆண்களும் குழந்தைகளும் அமர. தடுப்பின் பின்புறம் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.அது பெண்கள் அமர. டாக்டர் கிருஷ்ணஸ்வாமியின் க்ளினிக் கம் வீடு அது..கொஞ்சம் ”கேக்”கலாமா.

கேக் ஸ்பெஷல் இன்று. ஏன்னு பின்னாடி சொல்றேன் :)

இது சோழபுரத்தில் நடந்த ஒரு மீட்டில் ஒரே பெண்ணுக்கு இரண்டு டைப்புல கேக் வெட்டினாங்க. அதிலும் அந்த லாவண்டர் கலர் கேக் ரொம்ப ப்ரமாதம். ப்ளாக் ஃபாரஸ்ட் மாதிரி செம டேஸ்ட்


எக்மோர் ல ஒரு பேக்கரி அடையார் ஆனந்தபவன் & ஹாட் சிப்ஸ் பக்கத்துல கேக் கடை பேர் மறந்துட்டேன். இந்த ப்ளெயின் ப்ளம் கேக் படு டேஸ்ட். இதுல ப்ரவுன் ப்ளம் கேக்கைவிட இதுதான் செம ருசி.

காரைக்குடி கார்னர் பேக்கரில பன் கேக் மாதிரி டூட்டி ஃப்ரூட்டி எல்லாம் போட்டு நல்லா இருக்கு :)

வியாழன், 13 ஜூலை, 2017

சுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி ? – பேச்சிலர் சமையல்.முதல்ல அரை கப் அரிசி எடுத்து இண்டக்‌ஷன் குக்கர்ல போட்டு கழுவியோ கழுவாமலோ இரண்டரை கப் தண்ணீர் ஊத்தி சோறு வைக்கணும். அட சோறு சமைச்சாத்தானுங்களே கறிக்குழம்போட சாப்பிட முடியும். குழம்பையும் அதே குக்கர்ல வைக்கப் போறதால முதல்ல சாதம் வைச்சா வீசாம இருக்கும். வெந்துச்சோ வேகலையோன்னு ஒரு சவுண்ட்ல அமத்திட்டு லாப்டாப் பாக்கணும். ஹாஹா.

அடுத்து பத்து நிமிஷம் கழிச்சு நெனைப்பு வந்தாப்புல குக்கரை அடுப்புல இன்னொரு சவுண்ட் வர வரைக்கும் வைச்சு ஆஃப் சேசு. சோறு எப்பிடியும் ஆயிடும். உள்ளே இருக்க பயபுள்ள ப்ரஷர் வேகாம விடுமா என்ன.

அட சோறு வெந்தேபூடுச்சுபா. J
 
சரி சோத்தை அப்பிடிக்கா ஒரு பாத்துரத்துல மாத்திட்டு லேசா கயிவினா போதும்.கால்கிலோ கறியக் கழுவி அப்பாலிக்கா வைச்சிடணும். ரொம்பக் கழுவினா ருசி போயிடும். நல்லா தண்ணியப் பிழிஞ்சு மூடிபோட்டு வைக்கணும். 

பத்துப் பன்னெண்டு சின்ன வெங்காயம் ஏழெட்டு வெள்ளைப்பூண்டு, ஒரு தக்காளி இதெல்லாத்தையும் சுத்தமா உரிச்சி நறுக்கி வைக்கணும்.கொத்துமல்லியையும் சுத்தம் செய்து வைக்கணும்.

ஒரு பவுல்ல ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லிப்பொடியைப் போட்டுக் கலக்கி வைக்கணும். பொடி பத்தலன்னா வீட்ல இருக்குற கரம் மசாலா, கறிமசால்பொடி, சாம்பார் பொடி சேர்த்துக்கலாம். ஆனா ஆம்சூர் மட்டும் சேர்க்கக்கூடாது J

புதன், 12 ஜூலை, 2017

ஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.ஊமையன் கோட்டை என்றொரு நாவல் வானதி பதிப்பகத்தில் வெளியாகி இருக்கிறது. இதை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

/// "ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவலின் காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது."///

திருமயம் கோட்டைதான் ஊமையன் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்த இடம் என்று உறவினர் கூறினார். ஆனால் இது ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்று கூகுள் சொல்கிறது. ஆனால் இக்கோட்டை இன்று காதலிப்பவர்கள் ஒளிந்திருக்கும் இடமாக மாறி வருவது வருத்தத்துக்குரியது. வள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.
சென்னையில் 1976 இல் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்துக்கு ஒரு விடுமுறை நாளில் தம்பி பிள்ளைகளுடன் பார்க்கச் சென்றிருந்தேன். ம்யூசியம், மிருகக்காட்சி சாலை, கண்காட்சி, பொருட்காட்சி, தீம் பார்க் எல்லாம் இப்படி பிள்ளைகளை சாக்கு வைத்துத்தான் நாமும் சென்று பார்க்கவேண்டியதா இருக்கு J


செவ்வாய், 11 ஜூலை, 2017

காரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.இருளில் மூழ்கிக் கிடக்கும் அந்தத் தியேட்டரில்தான் கல்யாணியின் கணவன் படம் பார்த்தேன். 1963 இல் வந்த படம் திரும்பவும் 1983 வாகிலும் வந்திருந்தது. “நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அதில் இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்” என்ற பாடல் மறக்க இயலாதது.  இங்கே மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற மாயாஜாலப் படங்களும், இராஜா ராணிக் கதை உள்ள படங்களும் பார்த்திருக்கிறோம்.காரைக்குடி முத்துப்பட்டணத்தில் வ உ சி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்தான் அது. சினிமா முடிந்து வந்ததும் வெளியே இருளில் சாலைகள் எல்லாம் ஜில்லென்று இருக்கும். பரோட்டாக் கடைகளில் முட்டைப் பரோட்டாவுக்காகக் கொத்திக் கொண்டிருப்பது தாள லயத்தோடு பசியைத் தூண்டும். அப்போதெல்லாம் வெளியே பரோட்டா எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பழக்கமில்லை.

இழிவரலும் வீரமரணமும்.

1501. முடங்கிக் கிடந்த இறக்கைகளை விரிக்கும்போதுதான் பறத்தல் எவ்வளவு சுகமானது எனத் தெரிகிறது.

1502. தரைகளும் சுவரும் விட்டமும் பிரபஞ்சமானபோது ஜன்னல்வழிப் பால்வீதி வெளிச்சம் அள்ளி வீசுகிறது.

1503. தூறல் சிறிதுதான். அது கிளப்பிய குளிர்ச்சி அதிகம்.

1504. நேற்றைய தூக்கத்தில் விதைத்த கனவுகள் இன்று முட்டி முளைக்கின்றன. இன்றைய கனவுகளை பதப்படுத்தப்படுகின்றன நாளைய நனவாக.

1505. வீடு முழுமையாய் வசப்பட்டபோது பறத்தல் எளிதானது. .

திங்கள், 10 ஜூலை, 2017

மஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்களும்.மஹாபலிபுரம் ஒரு பார்வை என்ற பாலகணேஷ் சகோவின் ( தங்கத்தாமரை பதிப்பகம் ) நூலில் படித்தபின் தோன்றியது, மலைகளும் கூட ஒருநாள் கரையக்கூடும் என. மலையே கரையும்போது மனுஷன் எல்லாம் மண்ணுடா எனவும் தோன்றியது. 
 
அலை அடித்து அலை அடித்து அந்த ஐந்துரதக் கோயில்களும் உள்ளே இன்னொரு கோயிலில் அனந்தசயனப் பெருமாள் தோற்றத்தில் ஒரு சிலையும் சிதையுண்டு கிடக்கிறது.

மகேந்திர பல்லவரும் , மாமல்லர் நரசிம்மரும், பார்த்துப் பார்த்து உருவாக்கிய சிற்பங்களில் சிலவற்றையே ரசிக்க முடிகிறது. அவற்றைக் காணும்தோறும் நமக்கு ஆயனச் சிற்பியும் சிவகாமியம்மையும் மனக்கண்முன் தோன்றுவது தவிர்க்க இயலாதது. 

இரண்டு முறை மல்லைக்குச் சென்றிருந்தாலும் முதல் முறை எடுத்த புகைப்படங்களை இப்போது பகிர்ந்துள்ளேன்.
மாபெரும் வணிகத்தலமாக விளங்கிய மல்லை கடல் கொண்டபின் இன்று புராதனச் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கடற்கரைக் கோயில்கள், பஞ்சபாண்டவர் இரதங்கள் , குகைச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியன இங்கே சிறப்பு.


சங்கமம் சில புகைப்படங்கள்.

சென்னை சங்கமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விட்டுப்போன புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஈரோடு தமிழன்பன் முன்னிலையில் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கவிஞர் ஞானக்கூத்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, தோழி & கவிதாயினி சக்தி ஜோதி ஆகியோர் முன்னிலையில் கவிதை வாசித்தோம். 2011 ஜனவரியில்.
திரு கலாப்ரியா

வலையுலக திரையுலகச் சந்திப்புகள்.

வலையில் எழுத ஆரம்பித்து அவை பத்ரிக்கைகளில் வெளியாகத் துவங்கியபின் சில பல வலையுலக திரையுலகப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

அவற்றுள் சில சந்திப்புகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.


சென்னை லாமிகிளில் எங்கள் முகநூல் நட்பு வட்டத்தின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நண்பர்களின் அன்பு அழைப்புக்கிணங்க இந்த வி ஐ பி வந்திருந்தார்.

அதற்கு முன்பே முகநூல் வலைத்தளப் பகிர்வுகளில் ஆச்சியின் தீபாவளிப் பலகாரங்கள் அட்டகாசம் என்று கருத்துரை நல்கியிருந்தார்.

நல்ல படங்களின் மூலமே அறிந்திருந்த மிகவும் எளிமையான இந்த மனிதரைச் சந்திப்போமென்று நினைக்கவேயில்லை.

அனைவருடனும் உரையாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நண்பர் இயக்குநர் சேரன். அதன்பின்னும் சிலமுறை நட்புவட்டங்களிலும் விசேஷங்களிலும் சந்தித்திருக்கிறோம்.

இதில் இருக்கும் விஐபிக்களின் லிஸ்ட் பெரிது. அனைவரும் நண்பர்கள் என்றாலும் எழுத்தாளர் மதுமிதா, மென்சஸ் குறும்படம் எடுத்த கீதா, இயக்குநர் மாகி, டெக்கான் க்ரானிக்கிள்ஸ் எடிட்டர் பாகி, இயக்குநர் நவீன், நடிகர் நிதீஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு நம்மவீடு வசந்தபவனில் நிகழ்ந்தது.

வெள்ளி, 7 ஜூலை, 2017

ஆடிமாத சிறப்புக் கோலங்கள்:-


ஆடிமாத சிறப்புக் கோலங்கள்.

பூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.கடியாபட்டியில் இருக்கும் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீபூமிஸ்வர ஸ்வாமி கோயிலின் ஒன்பதாம் திருவிழா நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. சிலநாட்கள் முன்பு அங்கே சென்ற என்னை எனது சித்தப்பா அத்தேரைக் காண அழைத்துச் சென்றார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகக் கவர்ந்ததே ஒழிய அதன் சிறப்பம்சங்கள் புரியவில்லை. ஆனால் கிட்டே சென்று பார்த்தபோது அடடா.. என் சொல்வேன். அங்கே முழுதும் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு கண்கவர நின்றிருந்த தேரைக் கண்டேன். மெய்மறந்தேன். 


சுற்றிச் சுற்றிப் புகைப்படம் எடுத்தேன். :)எனக்கு இந்தத் தேரையும் அதன் வண்ணந்தீட்டப்பட்ட குதிரைகளையும்  பார்க்கும்போது கண்மணி குணசேகரனின் ஒரு கதை ஞாபகம் வந்தது. J
 இதில் தேர்க்கால் கட்டை, சக்கரம், குதிரைகள், தேரின் எல்லாப் பக்கங்களும் எடுத்திருக்கிறேன்.புதன், 5 ஜூலை, 2017

திருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.திருமயம் கோட்டையில் வெள்ளையனை மிரட்டிய விஷயங்கள் எனக் குறிப்பிட்டிருந்தது இந்த பீரங்கிகளைத்தான். கோட்டையின் உச்சியில் பாஸ்டியன் எனப்படும் ட்ரப்பீசிய/சதுர அமைப்பின் மேல் நிறுவப்பட்டிருக்கும் இவை வார்ப்பிரும்பில் செய்யப்பட்டவை.
சேதுபதி ராஜா காலத்தில் கட்டப்பட்ட கோட்டையில் இது எப்போது நிறுவப்பட்டது எனத் தெரியவில்லை. அதே 17, 18 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் முத்தரையர்கள் ஆண்டிருக்கிறார்கள். அப்போது கோட்டையில் எழுப்பப்பட்ட சிவ விஷ்ணு கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கிறார்கள். அதன் பின் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், இராமநாதபுரம் மன்னர், புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் ஆளப்பட்டிருக்கிறது இக்கோட்டை. பாளையக்காரர்களின் யுத்தத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.
இதை ஊமையன் கோட்டை என்றும் சொல்கிறார்கள். மலையின் ஓரிடத்தில் சிறு கருவறையாக செதுக்கப்பட்டு சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் அதன் எதிர்ப்புறம் ஒரு மறைவிடம் இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது. இதை கட்டபொம்மன் தஞ்சமடைந்திருந்த இடம் என்றும், ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்றும் சொல்கிறார்கள். அதனால் இது ஊமையன் கோட்டை எனவும் வழங்கப்படுது. ஒரே இருட்டாக இருக்கிறது. உள்ளே சில தூண்கள் தெரிகின்றன


இதன் அமைப்பைப் பார்க்கும்போது மிகச் சிறப்பான போர்ப் பாசறையாக இது இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. எதை வைத்துச் சொல்கின்றேன் என்றால் இந்த நன்னீர் சேமிப்புக் கிடங்கைப் பார்த்துத்தான். இது பாதுகாப்பாக இரும்புக் கிராதிகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஓவர் ஹெட் டாங்க் போல இருக்கும் இதிலிருந்து கோட்டைக்குள் தண்ணீர் குழாய்கள்மூலம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இது குஜராத், ஜெய்ப்பூர்  கோட்டைகள் போல மழைநீர் சேமிக்க அமைக்கப்பட்டிருக்கலாம்.

தெற்கு வாசலில் இரண்டு பீரங்கிகள் என்று சொன்னார்கள். இன்னும் ஐந்தாறு இருப்பதா சொல்றாங்க. ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே. ( என்னது அதுதான் இதுவா. ஹாஹா அடுத்த முறை அவற்றையும் தேடி எடுத்துப் புகைப்படம் போடுறேன். )
தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இதில் வெவ்வேறு இடங்களில் சுரங்கப் பாதைகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவன் விஷ்ணு கோயில்களில் இருந்தும் சிவலிங்க சேம்பரிலிருந்தும் இந்த ஊமையன் ஒளிந்திருந்த இடத்திலிருந்தும் கோட்டையை விட்டு வெளியே வெகுதூரம் செல்லக்கூடியதான சுரங்கங்கள் போரின் போது பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அத்யாவசிய உணவுத் தேவைகளை நிறைவேற்றவும், அவசரம் என்றால் தப்பிச் செல்லவும் உதவி இருக்கலாம்.
எவ்வளவு தேடியும் ஒண்ணுதான் அம்புட்டுச்சு J ஒண்ணு இங்கே இருக்கு மிச்சதெல்லாம் எங்கே.டிஸ்கி:- இதையும் பாருங்க. 

திருமயம் கோட்டையில் ஒரு உலா. 


Related Posts Plugin for WordPress, Blogger...