எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 செப்டம்பர், 2017

தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

உங்களுக்குத் தாய்மாமா இருக்கிறாரா. ? ஒன்றா இரண்டா.  ? ஒன்றோ இரண்டோ மாமாக்கள்  இருக்கின்றார்கள் என்றாலே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான்.  எனக்கு நான்கு அம்மான்கள் இருக்கிறார்கள். அப்போ நான் மிகுந்த தவப்பயன் செய்தவள்தானே.

எப்போதோ ஒருமுறை பார்த்துக் கொண்டாலும், எப்போதும் உங்களுடன் தொடர்பில் இல்லாதபோதும் முக்கியமான தருணங்களில் அவர்கள் அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். தாய்க்கு நிகர் தாய்மாமாக்கள்.  என்றால் மிகையில்லை.

என்னுடைய மூத்தமாமா தெய்வத்திரு சுப்பையா அவர்கள் காரைக்குடியில்  திருக்குறள் கழகத்தினை நிறுவியவர்களுள் ஒருவர். மூன்றாவது மாமா லயன் திரு வெங்கடாசலம் இன்றும் அக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருடம் ஒருமுறை விழா நடத்தி அக்கழகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களை அதன் செயலாளாராகத் திறம்பட நடத்துபவர்கள். நான்காவது மாமா நாணயம் திரு நாகப்பன் அவர்கள் பங்குச்சந்தையின் இயக்குனராகவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச்சந்தை பற்றிய நுண்ணிய தகவல்களை அளித்தும் அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தியும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள்.  
இங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட வந்தது என் இரண்டாவது மாமா ஜோகூர் திரு ராமநாதன் அவர்களை பற்றி. அவர்களை பற்றி முன்பே சிலமுறை எழுதியும் சென்னை அவென்யு, கொளத்தூர் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளுக்காகப் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன்.  வைரவன்பட்டியில் நடந்த அவர்களின் பீமரத சாந்திக்கு வெளியிடப்பட்ட நூல் பற்றியும் அவர்களின் பண்புநலன் பற்றியும் இங்கே எழுத விழைகிறேன்.
சிறுவயதில் எங்கள் ஐயாவுடன் மலாயாவுக்கு சென்றவர்கள் எங்கள் மாமா. கல்லுரிப் படிப்பு சென்னை கிறிஸ்டியன் காலேஜ். அதன்பின் திருமணம், மலாயாவில் கெமிஸ்ட்ரி டீச்சராகப் பணி புரிந்து தாயகம் திரும்பி செபியின் அங்கத்தினராகி பங்குச்சந்தை வணிகம். இப்போது கற்பித்தலை ஹாபியாகச் செய்துவருகிறார்கள்.


இந்நூலில் தங்கள் பாரம்பரியத்தின் வேரும் விழுதும், பாட்டையா, அப்பத்தா, தந்தையார், தாயார், தன்னைப் பற்றி மேலும் குடும்பம் பற்றிக் கூறியிருப்பதோடு  சாந்திக்கான விளக்கம், மலாயாவின் கிட்டங்கி பற்றிக் கூறியிருப்பது சிறப்பு. தன்னைச்சார்ந்த தன்மனைவி சார்ந்த ஒவ்வொரு உறவினருக்கும் இந்நூலில்  முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
அத்துடன் தன் சகோதர, சகோதரிகள் பற்றியும், என்னைப் பற்றியும் கூறியிருப்பது மகிழ்வுக்குரிய செய்தி. அதிலும் தொடர் முயற்சியாளர்கள், தொடர்ந்து எழுதிவருபவர்கள், என்ற காரணத்தினால் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். பெரியம்மா, அம்மா, மாமா ஆகியோரோடு என்னையும் இணைத்த அந்த அன்புக்குத் தலை வணங்குகிறேன்.
இது நான் வலைத்தளத்தில் வெளியிட்ட கட்டுரை, மேலும் அவர்களின் பேட்டிக் கட்டுரைகளும் வெளியாகி உள்ளன.

 " நகரத்தார்களைக் குறித்து எழுதப்பட்ட நூல்கள், நகரத்தார் மரபுப் புலவர்களும் அவர்கள் இயற்றிய நூல்களும்" என்றொரு இண்டக்ஸ் கொடுக்கப்பட்ட ஆவணப்பதிவு  மிக உபயோகமானது.


தன்  வலைத்தளத்தில் வெளியான முக்கிய கட்டுரைகளான மாணவர்களுக்கான  நினைவுத்திறன் மேம்பாடு, தேர்வை எதிர்கொள்வது, பெற்றோர் கவனத்திற்கு, உடல் நலம் , யோகா, ஆயுர்வேதம், மருந்து உங்களிடமே, ஆகிய கட்டுரைகள் அனைவரும் வாசிக்க வேண்டியவை.

மேலும் நிதி நிர்வாகம் பற்றி சேமிப்பு, நாணயங்கள் சேகரிப்பு ஆகிய கட்டுரைகளும், உலகச்சுற்றுலா பற்றிய கட்டுரைகளும் பயன்மிக்கவை.

என் மாமா மகள் வள்ளியம்மை சாத்தப்பன் தாய்தந்தைக்கு எழுதிய மனம் தொட்ட பாட்டுக்களும்  ( பல நாட்கள் இவை வாட்ஸாப்பில் உலா வந்தன ), என் பெரியம்மா இவர்கள் திருமணத்தின்போதும் & இப்போதும் எழுதிய வாழ்த்துப்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 

ஒரு முக்கிய விஷயம் சொல்லவேண்டும். என் மாமாவின் ஹாஸ்யத்திறனும் சரளமான மொழித்திறனும்  84 பக்கம்  கொண்ட இந்த நூலை ஒரே மூச்சில் விரும்பி வாசிக்க வைத்தன. எடுத்துக்காட்டு "யோகா செய்ய உட்காரும்போதுதான் பலர் நமக்கு இழைத்த அநீதி ஞாபகத்துக்குவரும். " " "தன்  தாயார் மாமியார் சொல்லைக்  கடைசிவரை மீறியதில்லை. மாமியாரும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கியதில்லை"

பெண்பீஷ்மராக வாழ்ந்த எங்கள் ரெண்டாங்கட்டுப் பாட்டி விசாலாக்ஷி அவர்கள்,  வீடு நிறையக்  குழந்தைகள்  வேண்டும்  என ஆசைப்பட்டு எல்லா உத்தரத்திலும் தொட்டில் கம்பி வளையம் மாட்டிய ( நாக. மெய்யப்பையா  ) பாட்டையா, தனது 3 வயது மகளுக்காக ( எங்கள் அலமேலு ஆயாவுக்காக  )  டாட்ஜ் கார் வாங்கிய ஆறாவயல் ( கரு. முத்து. வெங்கடாசலய்யா ) பாட்டையா, அதே மகளுக்காக ஆறாவயலில் பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி அதில் ஆண்டுவிழாவும் எடுத்திருக்கிறார்கள் என்பது படித்து உள்ளம் நெகிழ்ந்தேன்.  (ரெண்டாங்கட்டுப் பாட்டி என்றால் கம்பீரம், அலமேலு ஆயா என்றால் அன்பு. அதீத அன்பு ) இம்மாதிரி ஆவணப் பதிவுகள் அவசியம்.
இதையெல்லாம் விட எங்கள் ஐயா வள்ளியப்பையா பற்றி என் மனதில் கொஞ்சம் அச்சமும் பயமும் விலக்கமும் உண்டு. ஏனெனில் எங்கள் அப்பத்தா வீட்டு ஐயா அருணாசல ஐயா அன்பாலே செய்த மனிதர். ஆனால் ஆயாவிட்டு ஐயா கண்டிப்பானவர்கள். எல்லாவற்றிலும் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் உண்டு. மேலும் வார்த்தைகள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான். அவர்கள் சொன்னால் .சொன்னதுதான். 

ஐயா எதற்காவது கோபித்துக் கொண்டால் நான் எனது அப்பாவிடம் குறைப்பட்டுக் கொள்வேன். " ஐயாவுக்குப் பாசம் இல்லை. பேரன் பேத்தியாக நடத்தவில்லை அவர்கள் சொல்லும் வேலையைத் திறம்படச்  செய்யவேண்டும். அவ்வளவுதான்.  ஐயா ரொம்பக் கடுசு " என்று.

அதற்கு என் அப்பா சொல்வார்கள், " ஆத்தா ஐயா பிறந்தவுடன் ஆத்தா இல்லை, அப்பச்சி ஐயாவுக்கு மூன்று வயதாகும்போது  இறந்துவிட்டார்கள். சின்ன வயதிலேயே மலாயாவுக்கு தனியாகக் கொண்டுவிக்கச்சென்றார்கள். எல்லா கஷ்ட நஷ்டத்தையும் கடந்து வந்தவர்கள். அதனால் அப்பிடித்தான் இருப்பார்கள். அவர்கள் கடிசெல்லாம் இல்லாத்தா . சுபாவமே அப்பிடி. பெரியவர்களை  நாமதான் பணிஞ்சு போகோணும். " அப்போதெல்லாம் சரி என்று கேட்டுக் கொண்டாலும் மாமாவின் ஐயா பற்றிய  விவரமான பதிவு என்னுடைய எதிர்மறை சிந்தனைகளை மாற்றிவிட்டது.

ஐயா பற்றிய அற்புதமான விபரங்களைக் கூறி இருக்கிறீர்கள் மாமா. இதற்கு மிக்க நன்றி. இம்மாதிரி ஆவணப் பதிவுகள் ஒவ்வொரு குடும்பத்தாராலும் தாங்கள் முன்னோர்கள் பற்றி எழுதப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்கள் நூல். 

LIFE'S TREASURES ARE PEOPLE ... TOGETHER.  என்பது  உங்கள் மெயிலில் தொடர்ந்துவரும் வாசகம்.இதை மெய்ப்பித்துவிட்டது உங்கள் நூலும். வாழிய நலம். வாழ்க வளமுடன். தாய்மாமா வாய்ப்பது தவப்பயன். அதிலும் நீங்கள் நால்வரும் வாய்த்தது எனது பெரும்பேறு. அன்பும் நன்றியும் பெருமையுமாக உங்கள் அன்பு மருமகள். தேனம்மைலெக்ஷ்மணன்.

குறிப்பு :- தனது பீமரத சாந்தியின் போது எந்தவிதமான பரிசுப் பொருளும் ஏற்கப்பட மாட்டாது என இன்விடேஷனில் குறிப்பிட்டதுடன், சால்வை, சந்தனமாலை கூட ஏற்காமல் அத்தொகையை அன்னதானம் செய்யவோ ஊனமுற்றோர் இல்லத்துக்கு வழங்கவோ சொல்லிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கும் தனிப்பாராட்டு.  

summavinmama-rama.blogspot.com
indiansvisitingamerica.blogspot.com
examtechiniques.blogspot.com
indiancoincollections.blogspot.com
chennai.sanchaarnet.in/kkd_spvr

ஆகியன அவர்களின் வலைப்பதிவுகள்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க. 

ஹைர ஹைர ஐரோப்பா..

திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 

 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

87. இந்த சீர் போதுமா ?!


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. //இம்மாதிரி ஆவணப் பதிவுகள் ஒவ்வொரு குடும்பத்தாராலும் தாங்கள் முன்னோர்கள் பற்றி எழுதப்படவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்கள் நூல். // Ungal pathivum!! Bramippudan vasithen!!

    பதிலளிநீக்கு
  2. "தவப்பயன் செய்தவள்தானே".உண்மை
    தாய்மாமா தான் குடும்பத்தின் ஆணிவேர். தங்களுக்கு கிடைத்தவர்கள் மாமனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  3. nandri Madhavi

    nandri Jayakumar sago

    nandri mukundhan.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...